தமிழ்நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் பேருந்து சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய இரயில்வே சந்திப்பு உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் ஐந்து நடன சபைகளுள் ஒன்றhகிய வெள்ளியம்பல சபை உள்ள தலம். வரகுண பாண்டியனுக்காக இறைவன் கால் மாறி ஆடிய தலம். சிவபெருமான் 64 திருவிளையாடல்களைச் செய்தருளிய தலம். மூர்த்தி நாயனார் விபூதி, ருத்திராட்சம், சடைமுடி ஆகிய மூன்றையும் தரித்து ஆட்சி செய்த தலம். அரிமர்த்தன பாண்டியனின் சபையில் மாணிக்கவாசகர் மந்திரியாக இருந்த தலம். கூன் பாண்டியனின் சபையில் குலச்சிறை நாயனார் மந்திரியாக இருந்த தலம்.
சம்பந்தர் சமண சமயத்தைத் தழுவிய கூன் பாண்டியனின் சுரநோயை ஞமந்திரமாவது நீறுஞ என்ற திருநீற்றுப் பதிகம் பாடி தீர்த்தருளியும், அவனுடைய கூனை நீக்கி சைவ ஒளியயைப் பரப்பிய தலம். திருநள்ளாற்றில் பாடிய "போகமார்த்த பூண்முலையாள்" என்ற பதிகம் எழுதியிருந்த ஏட்டைத் தீலியிட்டு அதை எரியாமல் எடுத்தும், "வாழ்க அந்தணர்" என்ற பாடலை எழுதிய ஏட்டை வைகையாற்றில் இட்டு நீரை எதிர்த்துச் செல்லும்படி செய்து சம்பந்தர் சமணர்களை வென்ற தலம்.
இத்தலத்தில் முதலில் அன்னை மீனாட்சியை தரிசித்து விட்டுத்தான் இறைவனை தரிசிக்க வேண்டும். இங்குள்ள பொற்றாமரைக் குளம் சிறப்பு வாய்ந்தது. சங்கப்புலவர்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் சுவடியை இக்குளத்தில் போட, அந்தச் சுவடி சங்கப்பலகையில் மிதந்து வந்ததாக வரலாறு. திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் வாழ்ந்த தலம். |